அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
இந்திய குடிமக்களில் ஒருவராக, இந்தியாவில் வசிக்கிற, 2024, மார்ச் 31 அன்று 18 ஆண்டுகள் வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள, நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் உள்ள எந்தவொரு நபரும் மேஸி டைனாஸ்டார் போட்டியில் பங்கேற்க பதிவுசெய்யலாம். வேறொரு நபர் சார்பாக எந்தவொரு நபரும் பங்கேற்க இயலாது. இப்போட்டியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படியே போட்டியாளர்கள் இதில் பங்கேற்க முடியும். போட்டியின் குறும்பட்டியல் உருவாக்கும் நேரத்தின்போது தேவைப்படுகிற அடையாளச் சான்றுகளை போட்டியாளராகிய நீங்கள் சமர்ப்பிப்பது அவசியம்.
MasseyFergusonindia.com/DYNASTAR/season-3 என்ற வலைதளத்தில் Log on செய்யவும் மற்றும் இப்படிவத்தை அணுகிப்பெற மேஸி டைனாஸ்டார்-ன் பதிவுக்கான பேனர் மீது கிளிக் செய்யவும்.OTP சரிபார்ப்புக்கு உங்கள் மொபைல் எண்ணை பகிரவும். நீங்கள் பகிர்ந்துகொண்டுள்ள மொபைல் எண், இந்தியாவிலுள்ள ஒரு சேவை வழங்குனரோடு பதிவுசெய்யப்பட்டிருந்தால் மட்டுமே உங்களோடு எங்களால் தொடர்புகொள்ள இயலும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். இப்போட்டி நிகழ்வு தொடர்பான அனைத்து தகவல் பரிமாற்றமும் இந்த எண்ணுக்கு செய்யப்படும். இந்த மொபைல் எண் எப்போதும் இயக்கநிலையிலும் மற்றும் அணுகி தொடர்புகொள்ளக்கூடியதாகவும் இருப்பதை தயவுசெய்து உறுதிசெய்யவும்.
இந்த சீசனில் நீங்கள் உங்கள் ஐடியாவை எந்த ஒரு Massey Ferguson டிராக்டரிலும் செயல்படுத்தலாம்.
ஆம்! Season 3‑ல் நீங்கள் உங்கள் ஐடியாவை எந்த ஒரு Massey Ferguson டிராக்டரிலும் செயல்படுத்தலாம்.
கடைசி தேதி 31 மார்ச் 2026, இரவு 12 மணி.
நீங்கள் இறுதி 30 பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் சமர்ப்பித்த கருத்துக்கள்/யோசனைகள்/வடிவமைப்புகளை மேம்படுத்த, கூட்டாக உருவாக்க அல்லது செம்மைப்படுத்த, உங்கள் கோரிக்கையின் பேரில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, TAFE அல்லது மேஸி ஃபெர்குசன் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் உங்களைத் தொடர்புகொண்டு, தேவையான அனைத்து நியாயமான உதவிகளையும் தங்கள் சொந்தச் செலவில் வழங்குவார். ஒரு பங்கேற்பாளர் தனது யோசனைகளைச் செயல்படும் மாதிரிகள், வடிவமைப்புகள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகள் அல்லது செம்மைப்படுத்தப்பட்ட மாதிரிகளாக உருவாக்க, TAFE (அல்லது அதன் தொழில்நுட்பக் குழுவிடமிருந்து) தொழில்நுட்ப உதவியைக் கோரினாலோ அல்லது பெற்றாலோ, அந்த குறிப்பிட்ட வெளியீடுகள்/வடிவமைப்புகள்/மாதிரிகள்/மேம்படுத்தப்பட்ட மாதிரிகளின் முழு உரிமையாளராக TAFE மட்டுமே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தச் செம்மைப்படுத்தப்பட்ட பதிப்புகளின் முதன்மை உருவாக்குநராக, TAFE ஆனது இதன் விளைவாக வரும் மாதிரிகள், வடிவமைப்புகள் மற்றும் அத்தகைய தொழில்நுட்ப மேம்பாடுகள் மீதான அனைத்து தனியுரிமைகளையும் தக்க வைத்துக் கொள்கிறது.
ஆம், நீங்கள் பங்கேற்கலாம். இருப்பினும், அந்த யோசனை பிரத்தியேகமாக மேஸி ஃபெர்குசன் டிராக்டரில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்.
மேஸி ஃபெர்குசன் இந்தியா மற்றும் டாஃபே நிறுவனங்கள் பதிவுக்கான படிவங்களை கவனத்துடன் பரிசீலிக்கும் மற்றும் பங்கேற்பாளர்களின் குறும்பட்டியலை தயாரிக்கும். அடுத்த சுற்றுக்கு நீங்கள் தேர்வுசெய்யப்படுவீரானால், உங்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள தொடர்புக்கான விவரங்கள் வழியாக (மின்னஞ்சல் முகவரி/மொபைல் எண்) நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ தகவலளிப்பை நீங்கள் பெறுவீர்கள். குறும்பட்டியலில் இடம்பெறும் போட்டியாளர்களின் பெயர்களை மேஸி ஃபெர்குசன் இந்தியா மற்றும் டாஃபே – யின் சமூக ஊடக தளங்களிலும் மற்றும் வலைதளத்திலும் நாங்கள் அறிவிப்போம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஒரு ஒற்றை விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கு ஒரு மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்தமுடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல பிசினஸ் யோசனைகள் உங்களிடம் இருக்குமானால் உங்களது பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல்வேறு மொபைல் எண்கள் வழியாக அவைகளை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாயமாக நிரப்ப வேண்டிய புலங்கள் (*) அனைத்தையும் நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும்; அவ்வாறு பூர்த்திசெய்யாவிட்டால் படிவத்தை உங்களால் சமர்ப்பிக்க இயலாது. அது தவிர, அதிக தகவலை நீங்கள் தருவீரானால் உங்களை நாங்கள் இன்னும் சிறப்பாக அறிந்துகொள்ளவும் மற்றும் உங்கள் படிவத்தை மதிப்பிடவும் எங்களால் இயலும்.
ஆம். உங்களது புதிய மொபைல் எண்ணைக் கொண்டு நீங்கள் மறுபடியும் பதிவுசெய்ய வேண்டியது அவசியம். இப்போட்டி நிகழ்வு தொடர்பான அனைத்து தகவல் பரிமாற்றமும் இந்த எண்ணின் மீதே செய்யப்படும். இந்த எண் எப்போதும் செயல்பாட்டில் இருப்பதையும், அணுகப்படக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும்.
எங்களது கட்டணமில்லா இலவச தொடர்பு எண்ணின் வழியாக எங்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம் அல்லது corporate@tafe.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எங்களுக்கு எழுதலாம்.
படிவத்தின் ஒவ்வொரு பக்கமும் கட்டாயமாக நிரப்ப வேண்டிய சில புலங்களை (*) கொண்டிருக்கிறது. படிவத்தை சமர்ப்பிக்க தொடர்பான தகவலைக் கொண்டு அந்த அனைத்து புலங்களும் (கட்டங்களும்) நிரப்பப்பட்டிருப்பதை உறுதி செய்க. மேலும், வரியுருக்களின் எண்ணிக்கை (குறிப்பிடப்பட்டிருந்தால்) வரம்பை நீங்கள் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்க.
உங்களால் பகிர்ந்துகொள்ளப்படும் விவரங்கள், இப்போட்டி நிகழ்விற்காக உங்களது பிசினஸை மதிப்பீடு செய்வதற்கு நிறுவனத்தால் பயன்படுத்தப்படும். பகிர்ந்துகொள்ளப்படும் தகவல் இரகசியமாக பேணப்படும் மற்றும் எந்தவொரு மூன்றாம் தரப்புடனும் அவைகள் பகிர்ந்துகொள்ளப்படாது.
நேரடியாக கலந்துகொள்ளும் திறன்தேர்வு (ஆடிஷன்) சுற்றுக்கு நீங்கள் தேர்வுசெய்யப்படுவீரானால், பங்கேற்பாளருக்கும் மற்றும் அவருக்குத் துணையாக உடன் வரும் நபருக்கும் இரயில் போக்குவரத்து செலவு மற்றும் தங்குமிட செலவு நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். தேவைப்படுகிற ஆவணங்கள் மற்றும் நிழற்படங்களை சமர்ப்பித்தால் மட்டுமே திறன்தேர்வு நடைபெறும் அமைவிடத்திற்குள் நுழைய நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.
அனைத்து விண்ணப்பங்களும் மேஸி டைனாஸ்டார் போட்டிக்கான வலைதள பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் படிவத்தின் வழியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
‘மேஸி டைனாஸ்டார்’ போட்டியில் பங்கேற்பதற்கு எந்த நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை. இப்போட்டியில் பங்கேற்பு என்பது முற்றிலும் இலவசமானது.
நிச்சயமாக. தொழில்முறைசார்ந்த ஒரு கேமரா அல்லது ஒரு ஸ்மார்ட்ஃபோன் என எந்தவொரு கேமராவைக் கொண்டும் நீங்கள் படம் பிடிக்கலாம். வழிகாட்டல் விதிகளை அவைகள் பூர்த்திசெய்யுமானால் அவற்றை நீங்கள் தாராளமாக சமர்ப்பிக்கலாம். விதிகள் & ஒழுங்குமுறைகள் மீது அதிக தகவலை அறிய இங்கு கிளிக் செய்யவும்.
போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் Ms word அல்லது pdf வடிவத்தில் இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது 720p ரெசல்யூஷனில் இருக்க வேண்டும். வீடியோவின் காலஅளவு 2 நிமிடங்கள் காலஅளவுக்கு மிகைப்படக்கூடாது. 100MB-க்கு அதிகமானதாக வீடியோக்கள் இருக்கக்கூடாது. Mp4 அல்லது MOV வடிவத்தில் மட்டுமே அவைகள் இருக்க வேண்டும்.
இல்லை. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட / வெளியிடப்பட்ட எந்தவொரு யோசனைகளையும் (வீடியோவை) இப்போட்டிக்கு சமர்ப்பிக்க இயலாது.
இல்லை. வீடியோக்கள் அல்லது யோசனையை ஒருமுறை சமர்ப்பித்துவிட்டால் அதற்குப் பிறகு அவைகளை மாற்ற இயலாது.
இல்லை. பங்கேற்பாளரின் அடையாளம் நடுவர்களுக்கு வெளிப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து வீடியோக்களிலும் எந்தவொரு வாட்டர்மார்க் அல்லது காப்புரிமை தகவலும் இடம்பெறக்கூடாது. சமர்ப்பிப்புகளை ஆய்வுசெய்து பரிசீலிப்பது முற்றிலும் பாகுபாடின்றி இருக்கும். பங்கேற்பாளர்களின் விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவலை நடுவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
உங்களது யோசனையின் ப்ளூபிரிண்டுக்கு (மூல வரைபடம்) செயல்படுகின்ற மாடலை / மாதிரியை நீங்கள் உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் தகுதி பெற்றவுடன், மேஸி ஃபெர்குஸன் இந்தியா உங்களை தொடர்புகொண்டு இச்செயல்முறை குறித்து நிகழ்நிலைத் தகவலை உங்களுக்கு தொடர்ந்து வழங்குவார்கள்.
உங்களது ப்ளூபிரிண்டை சாத்தியமுள்ள வரை விரிவானதாக நீங்கள் உருவாக்கலாம். ஆனால், அது தெளிவானதாக இருக்க வேண்டும் மற்றும் துல்லியமான சித்தரிப்பாக இருப்பது அவசியம்.