MF DYNATRACK – டிராக்டர்களின் ராஜா

By Massey Ferguson India

September 13, 2022

Read Time : 5 Mins

Share the Blog:

இந்தியாவில் Massey Ferguson டிராக்டர்களை உற்பத்தி செய்யும் டிராக்டர்கள் மற்றும் ஃபார்ம்  எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE), புதிய DYNATRACK தொடரின் மூலம் டிராக்டர் துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஆற்றல் நிரம்பிய மேம்பட்ட அம்சங்களுடன் ஒப்பிடமுடியாத பயன்பாட்டை இந்த புதிய டிராக்டர் வழங்குகிறது. இந்த பிராண்டானது டிராக்டர் தொழில்துறையில், பல  புதுமைவாய்ந்த  தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது. நம்முடைய நாட்டின் மண் வளத்திற்கு ஏற்றவாறு டிராக்டர்களை 60 ஆண்டுகாலமாக  தயாரித்து வருகிறது. இது கிராமப்புற மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது.

TAFE, தனது பல்துறை விவசாய மற்றும் பயன்பாட்டு டிராக்டர்கள் மூலம் டிராக்டர் துறையில் வாடிக்கையாளர்களின் தேவையை மையமாகக் கொண்ட கண்டுபிடுப்புகளை பயன்படுத்தி, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் முன்னோடியாக காலம் காலமாக தன்னை நிரூபித்துவருகிறது. நிலையான செயல்திறன், குறைந்த இயக்க செலவு மற்றும் சிறந்த நீடிப்புத்தன்மை ஆகிய, ஒவ்வொரு விவசாயியின் தேவைகளை பூர்த்திசெய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. அதன் எண்ணற்ற அளவிலான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வரையறுக்கிறது. எந்தவொரு நிலப்பரப்பிலும் மிகசிறந்த வேகம் மற்றும் ஆற்றலை வழங்கும் தன்மை, ஆகியவை உலகளவில் நிரூபிக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவத்துடன் இது கனரக இழுவை மற்றும் வணிகப் பிரிவுகளை மறுவரையறை செய்துள்ளது.

புதிய DYNATRACK தொடரானது, அடுத்த தலைமுறை விவசாயிகள், கிராமப்புற தொழில்முனைவோர் மற்றும் பிற வணிக பயன்பாடுகளுக்காக பிரத்தியேகமாக சிறந்த கட்டமைப்பு தரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒப்பற்ற பல்துறை, உகந்த வேகம், உற்பத்தித்திறன் மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தன்மை, அதிக பளுவை தூக்கும் திறன் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், இந்திய நிலப்பரப்பையே மாற்றி அமைக்க வழிவகை செய்கிறது.

DYNATRACK ஆனது உங்களின் விவசாய, வணிக மற்றும் கட்டுமானத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான அதிக பேலோட் அதாவது அதிக எடையை இழுத்துச்செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

MF இன் 2WD DYNATRACK (MF 241, MF 246 and MF 254) ஆனது VersaTECH™  தொழில்நுட்பத்துடன் உலகின் முதல் நீட்டிக்கக்கூடிய வீல் பேஸுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது அதிக நிலைத்தன்மையை அளிக்கிறது மற்றும் அதிக பாரத்தின் காரணமாக டிராக்டர் முன் தூக்குதலைத் தடுக்கிறது. இந்த முதல்-வகையான நீட்டிக்கக்கூடிய வீல்பேஸ் தொழில்நுட்பமானது எடையை விநியோகிப்பதற்கும் உதவுகிறது, டிராக்டரின் நிலைத்தன்மையை உறுதிசெய்கிறது மற்றும் கனரக பொருட்களை ஏற்றிச் செல்லும் போது டிரைவரின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

DYNATRACK டிராக்டர்கள்  உலகளவில் நிரூபிக்கப்பட்ட Simpson எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, கட்டுமானப் பொருட்கள், கனிம சுரங்கங்கள், கல் குவாரிகள், கரும்பு மற்றும் பிற கனரக சுமத்தல் நோக்கங்களுக்காக டிராக்டரை செயல்படுத்துகிறது. 

MF இன் 4WD DYNATRACK (MF 244, MF 246 and MF 254) ஆனது மிக கடினமான சதுப்புகளிலும் சிறப்பாக செயல்படும். இது DynaTRANS™ டிரான்ஸ்மிஷன் மற்றும் Super Shuttle™ தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இது எளிதான கியர் தேர்வுக்காக அதன் நவீன தடையற்ற கியர் ஷிஃப்டிங் பொறிமுறைகளுடன், மனித சக்தியின் செலவீனத்தை குறைக்கிறது. DYNATRACK இன் 24-Speed Super Shuttle™ கியர் பாக்ஸ், டிராக்டரை முன்னும் பின்னும் ஒரே வேகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவானதாக உள்ளது.

DYNATRACK தொடரின் 4-in-1 Quadra PTO™ ஆனது, ஆண்டு முழுவதும் அனைத்து பயன்பாடுகளுக்கும் பல்துறை திறன் கொண்ட டிராக்டராக்குகிறது. இந்த கட்டமைப்புகள் அனைத்தும் வேகமான சுமை நிறைவு சுழற்சிக்கு உதவுகின்றன, ஓட்டுனரின் சோர்வைக் குறைப்பதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன.

ஒரு தடையற்ற டிரெய்லர் ஹிட்ச்சிங் பாயிண்ட், அதிக சுமையின் போது சிறந்த நிலைப்புத்தன்மைக்கு சரிசெய்யக்கூடிய வீல் டிராக் மற்றும் வாகனம் ஓட்டும் போது எளிதாக திரும்புவதற்காக குறைந்த திருப்புதல் ஆரம் ஆகியவை எந்தவொரு ஹாலேஜ் டிராக்டருக்கும் சில முக்கிய அம்சங்களாகும். MF இன் DYNATRACK தொடர், அதன் திடமான செயல்திறனுடன் வரையறைகளை அமைத்துள்ளது. இந்த அனைத்து அளவுகோல்களிலும் DYNATRACK, இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ், சீரற்ற சாலைகளில் வாகனம் ஓட்டுவதை எளிதாக்குகிறது.

ஆயில் இம்மர்ஸ்டு பிரேக் சிஸ்டம் (OIB), சாய்வான நிலப்பரப்பிலும் சிறப்பாகச் செயல்படும். ஓட்டுனருக்கு உயர்மட்ட பாதுகாப்பை வழங்குகிறது, இது MF ஐ உண்மையிலேயே அனைத்து நிலப்பரப்புகளுக்கும் ஏற்ற டிராக்டராக மாற்றுகிறது. உலகப் புகழ்பெற்ற DynaLIFT ® ஹைட்ராலிக்ஸ் அமைப்பால் இயக்கப்படும் அப்லிஃப்ட் கிட்(uplift kit)  நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது விவசாயம், பாரம் சுமப்பது மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

டிராக்டரின் வெளிப்புறமாக இயக்கப்படும் ஹைட்ராலிக்ஸ் அமைப்புகளின் திறமையான பயன்பாட்டை உறுதிசெய்யும் வகையில், ஃபிரண்ட் லோடர், டோசர், கிரேன், பேக் ஹோ மற்றும் ஹோல் டிக்கர் போன்ற வணிக ரீதியாக இயக்கப்படும் உபகரணங்களுக்காக பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலுவான அம்சங்கள் எரிபொருள் செயல்திறனில் சமரசம் செய்யாமல் ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு இரண்டிலும் சிறந்த செயல்திறனை உத்தரவாதம் செய்து, TAFE இன் DYNATRACK உண்மையான #Sabsebadaallrounder ஆக்குகிறது.

அனைத்து MF டிராக்டர்களிலும் உள்ள ஆப்பரேட்டர் வசதி, நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர்களின் இதயங்களை வென்றுள்ளது. செராமெட்டாலிக்கினால் செய்யப்பட்ட டூயல் டயாஃபிராம் கிளட்ச் சிஸ்டம், கியர் தேர்வின் போது கிளட்சை துண்டிப்பதற்கான கிளாம்பிங் விசையைக் குறைக்கிறது, இதனால் ஆப்பரேட்டர்களின் சிரமம் குறைகிறது.

TAFE தனது அனைத்து தயாரிப்புகளிலும் பாதுகாப்பு, வசதி மற்றும் செயல்பாடுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பை எப்போதும் உறுதிசெய்து வருகிறது.  நவீனகால விவசாயிகள் மற்றும் முற்போக்கான வாடிக்கையாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அதன் எதிர்கால தொழில்நுட்பத்துடன் எப்போதும் வளர்ந்து வரும் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
மேஸ்ஸியின்  DYNATRACK  டிராக்டரைப்  பற்றி மேலும் அறிய பார்வையிடவும்: https://masseyfergusonindia.com/DYNATRACK

Other Articles